குவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற பின்னர், ஒப்பந்தத்தின் பிரகாரம் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு உரிய முறையில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படவில்லையென, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் தனிப்பட்ட ரீதியில் அதனை ஆராய்ந்து அதற்கு அவசியமான நடவடிக்கையை எடுக்குமாறு குவைத்திலுள்ள இலங்கை தூதரக அலுவலக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன் விளைவாக 4 தொழிலாளர்கள் கடந்த மே 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த நிலையில், எஞ்சிய ஏனைய 35 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கருத்து தெரிவிக்க