எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தாம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாக முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்பன்பில மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஆகியோருடன் எதிர்க்கட்சி தலைவர் விஷேட சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து இன்று புதன்கிழமை பிரபா கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் ஆதரவு முக்கியமானது என்பது சம்பந்தமாகவும், வன்னி மாவட்ட தமிழ் மக்களின் நலன் கருதியும் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தாங்கள் ஆதரவளிப்பதற்கு முன்பு ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் நால்வரும் முன்னாள் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க