வெளிநாட்டு செய்திகள்

ஆந்தை வடிவத்திலான உளவு விமானம் :

ரஷ்யாவில் நடந்த இராணுவ ஆயுத தளபாடக் கண்காட்சியில் ஆந்தை வடிவத்தில் உருவாக்கப்பட்ட உளவு விமானம் ஒன்றை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் , வாகனங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் பீரங்கிகள் , ஏவுகணைகள் குண்டுகளை வெடிக்கச் செய்து செயன்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன . வேகமும், துல்லியமும் ஆளில்லா விமானத்தின் முக்கிய குறியாக இருக்கும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் , செர்ஜி சொய்கு தெரிவித்தார். இதேபோன்று கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த போர் விமானங்களும் , தாக்குதல் உலங்கு வானூர்திகளும் குறி தவறாமல் குண்டுமழை பொழிந்தன. இதில் ஆந்தை வடிவிலான ஆளில்லா விமானம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க