ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்புரிமையை இந்தியா பெற்றுக்கொள்வதற்கான வேட்பாளர் நிலைக்கு இலங்கையின் ஆதரவு கிடைத்துள்ளது.
இலங்கை உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 55 நாடுகள் இந்தியாவுக்கு இந்த உறுப்புரிமை கிடைப்பதற்கு தமது இணக்கத்தை வழங்கியுள்ளன.
சீனா,ஆப்கானிஸ்தான், நேபாளம், ஈரான், ஜப்பான், குவைத், மலேசியா, மாலைத்தீவு, பூட்டான் உட்பட்ட நாடுகளே இந்தியாவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கான சபை அமர்வு அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஐந்து நிரந்தரமற்ற உறுப்புர்pமைகளில் இந்தியாவுக்கு ஒரு உறுப்புரிமை கிடைக்குமானால் 2021- 2022 ஆண்டுக் காலப்பகுதிக்கு இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியாவுக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக இணக்கத்தை வெளியிட்ட நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி செய்ட் அக்பர்தீன் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க