விளையாட்டு செய்திகள்

உதைப்பந்தாட்டம்: பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு வெற்றி

கண்டி மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையே இடம்பெற்ற பெண்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டியில் பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு வெற்றி பெற்றது.

பேராதனை பலகலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவும் குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவும் போட்டியிட்டன.

இதில் 3 – 2 என்ற கோல் வித்தியாசத்தில் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவு வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க