21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது ‘நாடகத்தையே’ அரங்கேற்றிவருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்துள்ளார்.
ஊடகப்பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” 21/4 தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழுவுக்கான கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் அலரிமாளிகையில் இருந்தே எழுதப்படுகின்றது. அதை குழு உறுப்பினர்கள் வெற்றிகரமாக அரங்கேற்றிவருகின்றனர்.
எனவே, தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படுமானால் அந்த அழைப்பை ஏற்கமாட்டேன்.” என்றார்.
கருத்து தெரிவிக்க