சினிமா

தன் வெற்றியின் ரகசியத்தை சொல்லும் சமந்தா

எல்லோரையும் போல நானும் தவறுகள் செய்து இருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொண்டேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தொடர்ந்து சமந்தா நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடைந்து வருகிறது. தமிழில் அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படமும், தெலுங்கில் மஜிலி படமும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்து தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தன் வெற்றி தொடர்பில் பகிர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு தவறில் இருந்தும் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். என்னை விட அதிகம் உழைப்பவர்களும், திறமையானவர்களும் சினிமா துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகியாக எனது பயணம் வெற்றியடைந்ததற்கு கதைகளின் தெரிவு தான் காரணம்

கதைகளைத்தான் நான் நம்புகிறேன். கதை தெரிவில் நான் செய்த சில தவறுகளையும், அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் மறக்கவில்லை. அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.

மற்றவர்களையும் கவனித்து அவர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இதுதான் எனது வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க