விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலிய அணி முதலிடம்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் அவுஸ்ரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் ஊடாக முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலியா பெற்றுக்கொண்ட வெற்றியின் ஊடாக 2 புள்ளிகளுடன் மொத்தம் 12 புள்ளிகளை பெற்றுள்ளது.

11 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் இந்தியா 9 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்திலும் 8 புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து 4ஆம் இடத்திலும் 7 புள்ளிகளைப் பெற்ற பங்களாதேஷ் 5ஆம் இடத்திலும் உள்ளன.

இதேவேளை, 6 புள்ளிகளைப் பெற்ற இலங்கை 6ஆம் இடத்திலும் 5 புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் 7ஆம் இடத்திலும் 3 புள்ளிகளைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முறையே 8ஆம் 9ஆம் இடங்களிலும் எந்தப் புள்ளிகளையும் பெறாத ஆஃப்கானிஸ்தான் அணி 10ஆம் இடத்திலும் உள்ளன.

 

கருத்து தெரிவிக்க