சினிமா பட விழாவில், ‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பேசினார். “மாணவர்களுக்கு முதலில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஜோதிகாவின் ‘ராட்சசி’. படத்தின் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் ஜோதிகா தேர்வு தொடர்பில் பேசியுள்ளார்.
நிறைய அரசு பள்ளிக்கூடங்களில், போதுமான ஆசிரியர்கள் இல்லை. அந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?
அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
அப்படி வசதிகளை செய்து கொடுத்த பின், ‘நீட்’ தேர்வு உள்பட எந்த தேர்வை வேண்டுமானாலும் நடத்தட்டும். இதைத்தான் ‘ராட்சசி’ படத்தில் சொல்லி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
கருத்து தெரிவிக்க