அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முறுகல் போக்கு தொடர்கின்ற நிலையில், கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதோடு ஈரானிய தலைவர் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிமாற்றம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான ஆணையில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
“அமெரிக்கா இதே அணுகுமுறையை தொடர்ந்தால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை” என்று ஐ. நா வுக்கான ஈரான் தூதுவர் மஜித் தக்த் ரவாஞ்சி கூறியுள்ளார்.
மேலும் “இந்த பொருளாதார தடைகள் ஈரான் மக்கள் , தலைவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் விரோத போக்கையே காட்டுகிறது. அத்துடன் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என்பதையும் காட்டுகிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க