விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சகீப் அல் ஹசன் சாதனை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் அரைச்சதம் கடந்து 5 விக்கெட்கள் பெறுதியைப் பதிவுசெய்த உலகின் இரண்டாவது வீரராக பங்களாதேஷின் சகீப் அல் ஹசன் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.

அத்துடன் பங்களாதேஷ் சார்பாக உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரொன்றில் 5 விக்கெட்கள் பெறுதியைப் பதிவுசெய்த முதலாவது வீரராகவும் சகீப் அல் ஹசன் வரலாற்றில் இணைந்துள்ளார்.

சவுத்ஹெம்டனில் நேற்று திங்கட்கிழமை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 51 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

கருத்து தெரிவிக்க