உள்நாட்டு செய்திகள்புதியவை

பாதிப்புக்குள்ளான அரச ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

2005 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில்அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுமார் 31,௦௦௦ அரச ஊழியர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதுடன் அடுத்த இரண்டு மாதங்களில் அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த விடயத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் பிரதமர் முன்வைத்த அமைச்சரவை அறிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவதானிப்புகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவை அறிக்கை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், பாதிப்புக்குள்ளான அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்தவாரம் அமைச்சரவை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம், செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் இத்திட்டம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க அறிவித்துள்ளது.

மேலும் கருத்தில் கொள்ள வேண்டிய எந்தவொரு விடயத்தையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க