உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் நியமனம்!

கிழக்குப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக மட்டக்களப்பு களுதாவளை பகுதியைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்துக்கு அமைய உபவேந்தரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலும், கடமை அடிப்படைகளில் பதில் பதிவாளர்கள் கடமைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த நியமனம் இடம்பெற்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க