நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த சில நாட்களாக பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் இந்த தெரிவுக் குழுவில் சாட்சி வழங்க அழைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த தெரிவுக் குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களான சகால ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும் சாட்சியம் வழங்க அழைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க