உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடரும் வறட்சி – நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான காலநிலை தொடருமாக இருந்தால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில், அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 13 வீதமாகவும் மட்டக்களப்பில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 15 வீதமாகவும் மொனராகலை மாவட்டத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 17 வீதமாகவும் குறைவடைந்துள்ளது.

அத்துடன், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முறையே 28, 46, 45, 48, 54 மற்றும் 42 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 3 மாதங்களில் எதிர்பார்த்த அளவு மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க