அரசாங்கத்துக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் தீவிர பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வியூகம் வகுத்துள்ளது.
‘ அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான 100 நாள் திட்டம்’ என இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக விடுக்கவுள்ளார்.
அதன்பின்னரே மறுநாள் முதல் அரசாங்கத்துக்கு எதிரான ஆட்டத்தை மஹிந்தவின் சகாக்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க