சினிமா

ஹொலிவுட் செல்லவிருக்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து “லாபம்” படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன்; ஹொலிவுட்டில் தயாராகும் டிரெஷ் ஸ்டோன் என்ற தொடரில் நடிக்க இருக்கின்றார். அந்த வகையில், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மற்றும் நிம்ரத் கவுர் போன்ற நடிகைகளுக்கு பிறகு ஹொலிவுட்டில் களமிறங்கும் இந்திய நடிகையாக இருக்கின்றார் ஸ்ருதி ஹாசன். இத் தொடரில் புலனாய்வுத் துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், இதுபற்றி தனது தந்தையிடம் கூறிய போது மற்ற இந்திய தந்தைகளைப் போல் இல்லாமல் “நல்ல வேலை” என்று மட்டும் கூறினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தொடரில் நடிப்பதற்கு முன்பு அதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க