அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ , அந்நாட்டின் நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு பயணித்துள்ளார். ஈரானுடனான முறுகல் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் , மைக் பாம்பியோவின் சவுதி அரேபிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்து மைக் பாம்பியோ உரையாட உள்ளார். இந்த சந்திப்புக்கு பின் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க