வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி என்று ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் பதுக்கிய கறுப்பு பணத்தை மதிப்பிடுமாறு மத்திய நிதி அமைச்சானது , நியமித்த விசேட குழு சமர்ப்பித்த அறிக்கையில் மேற்படி பண விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் 28–ம் திகதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அந்த அறிக்கை நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், 1980 – 2010 -ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.26 லட்சத்து 88 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை என தேசிய பொருளாதார ஆராய்ச்சி சபை அடங்கிய குறித்த குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க