தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் அளவுக்கு ஒரு நாடு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சகாப்தத்தை தான் உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர் , யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் மக்கள் அவரை நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நீண்டகால யுத்தம் இடம்பெற்ற போதிலும், அந்த நேரத்தில் மக்கள் அதனை சுமையாக உணரவில்லை. மக்களுக்கு சுமையை அளிப்பது முறையானதொன்றல்ல.
தற்போதைய அரசாங்கம் ஸ்திரமற்று காணப்படுகின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளனர். இது நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பாகவுள்ளது.
மக்கள் இப்போது வாழ்வதற்கான உரிமையையும் ஒரு மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையையும் இழந்துவிட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க