உலக கிண்ண கிரிக்கட் தொடரில் சவுதம்டனில் இன்று இடம்பெறும் 31–வது லீக் போட்டியில் ஆசிய அணிகளான பங்களாதேஷும் , ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி இரத்து என்ற நிலையில் 5 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சிய 3 போட்டி களிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே அரை இறுதி சாத்தியமாகும்.
இதேவேளை குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய போதும் சிறப்பாக விளையாடி இருந்தது.
குறைந்தது ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ஆப்கானிஸ்தானுக்கு இன்றைய போட்டி நல்ல வாய்ப்பாகும்.
கருத்து தெரிவிக்க