சினிமா

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள்

700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை மேதையாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய விசுவநாதன்-ராமமூர்த்தி மெல்லிசை மன்னர்களாக வலம்வந்தனர்.

எம்ஜிஆரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து எண்ணற்ற பாடல்களைத் தந்த எம்.எஸ்.வி. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கினார்.

டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், சந்திரபாபு, ஜெயலலிதா, பி.சுசிலா, வாணி ஜெயராம், எல்,ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய ஆயிரமாயிரம் பாடல்கள் எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் வெளிவந்தன.

இசையமைப்பாளராக மட்டுமின்றி நல்ல பாடகராகவும் திகழ்ந்த எம்.எஸ்.வி. ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் படைத்தளித்த கணக்கிலடங்கா பாடல்கள் அன்றும், இன்றும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அவரது பிறந்ததினம் இன்று நினைவுகூரப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க