எத்தியோப்பியா அம்ஹாரா மாகாணதத்தில் ஆட்சிகவிழ்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த பிராந்தியத்திற்கான ஆட்சித்தலைவர் மற்றும் இராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதை எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமதுவின் செய்தி தொடர்பாளர் பில்லினி நேற்று உறுதி செய்துள்ளார்.
பிராந்திய ஆட்சித்தலைவர் அம்பாசெவ் மெகோனன் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அவரும் அவரது ஆலோசகரும் சுட்டு கொல்ல ப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து எத்தியோப்பிய இராணுவ தளபதி சியாரே மெகோனனை, அவரது வீட்டில் வைத்து அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக்கொன்றுள்ளார்.
மெய்க்காப்பாளர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த கொலைகளின் பின்னணியில் மாகாணத்தின் பாதுகாப்பு தலைவர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க