சினிமா

நடிகர் சங்க தேர்தல்-நீதிமன்ற உத்தரவின் பின் வாக்குகள் எண்ணப்படும்

நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர் சங்கத் தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நேற்று இடம்பெற்றது.

இந்த தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர்.

தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை.

தேர்தல் 5 மணிக்கு நிறைவு பெற்றதை ஒட்டி, வாக்குப்பெட்டிகள், சீல் வைக்கப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கிக்கு அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க