சினிமா

ராகுல் பிரீத் சிங்குடன் இணையும் பிரியா பிரகாஷ் வாரியர்!

தமிழில் “ஸ்பைடர்” மற்றும் “என்ஜிகே” படத்தில் நடித்த நடிகை ராகுல் பிரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கின்றார். இருப்பினும், தமிழ் சினிமா எதிர்பார்த்த அளவு கைகொடுக்காத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதனடிப்படையில், தெலுங்கில் “மன்மதடு 2”, ஹிந்தியில் “மர்ஜவான்” ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், நிதின் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் இணைந்துள்ள பிரீத் சிங்குடன், இன்னொரு நடிகையான “அடார் லவ்” என்ற மலையாள படத்தில் நடித்த பிரியா வாரியர் நடிக்கின்றார் என்பதுடன், சந்திர சேகர் ரெட்டி என்பவரின் இயக்கத்தில் இப்படம் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க