- நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.
- உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.
- ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.
- பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.
கருத்து தெரிவிக்க