அழகு / ஆரோக்கியம்

நலம் தரும் யோக முத்திரைகள் , தொடர்…..

வாயு முத்திரை

செய்முறை

ஆட்காட்டி விரலின் நுனியால் பெருவிரலின் அடிப்பகுதியை தொட்டவாறும் இருக்க. பெருவிரல் மெதுவாக வளைந்து ஆட்காட்டி விரலின் கணுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. அமரும் போது, நிற்கும் போது, படுக்கும் போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். 45 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் வாயுவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப் பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட வாய்வுத் தொல்லைகளும் நீங்கும் . உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி வாய்வினால் ஏற்படும் நெஞ்சு வலியை குணமாக்கும். மேலும் மூட்டு வலி , கழுத்து வலிகளையும் குணமாக்கும்.

கருத்து தெரிவிக்க