ஈரானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்தியது. இதனால் பெரும் பாதிப்பை சந்தித்த ஈரான் ஒப்பந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க போவதில்லை என அறிவித்தது.
கடந்த 20 ஆம் திகதி அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் முறுகல் நிலை தொடர்கிறது. இந்நிலையில் ஈரானின் 3 இராணுவ நிலைகளை தாக்க உத்தரவிட்ட பின், அதன் விளைவுகள் பற்றி தெரிய வந்ததும் தாக்குதலை கைவிடும் படி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரானின் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கோலமாலி ரஷீத், ” அமெரிக்க இராணுவ வீரர்களின் உயிர்களை காக்க ட்ரம்ப் நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். போர் தொடங்கி விட்டால் அதன் நோக்கமும் , கால அளவும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். ” என மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜோண் போல்டனும் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
கருத்து தெரிவிக்க