அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் , பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் கட்டுப்பாட்டு கணினிகள் மீது அமெரிக்கா இணையத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
அண்மையில் ஈரான் வான் பரப்பில் அமெரிக்க ஆள் இல்லா விமானம் அனுமதி இன்றி பறந்ததால் அதனைச் சுட்டு வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்க தாக்குதல் ஒன்றுக்கு தயாரானது அமெரிக்க இராணுவம். எனினும் கடைசி நேரத்தில் திட்டத்தை ட்ரம்ப் கைவிட்டார்.
இருப்பினும் பதில் தாக்குதல் நடத்துவதில் முனைப்பாக இருக்கும் அமெரிக்க இராணுவம், கடந்த வியாழக்கிழமை ஈரானின் ஆயுத கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது இணையத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ரொக்கெற் , ஏவுகணைகளை ஏவும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் கட்டுப்பாட்டுக் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் அனுமதி பெற்ற பின்பே தாக்குதல் நடத்தியதாகவும் , இதற்காக பல நாட்களாக திட்டமிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இத்தாக்குதலை ஈரான் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க