கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஹங்குரன்கெத்த முல்லோயா தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.
அமைச்சின் மூலமாக கட்டிடத்திற்காக 8 மில்லியன் ரூபாவும் தளபாடங்களுக்காக ஒரு மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி.சத்தியேந்திரா உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க