உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான 1.8 கிமீ நீளமான கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி மீள்குடியேற்றத்திற்கு பின்பும் இன்றுவரை குன்றும் குழியுமாக காணப்படுவதோடு வீதியின் ஒருபகுதி வாய்க்காலாக மாறியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு 100 க்கு மேற்ப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 400க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் அவர்களில் 70 பாடசாலை மாணவர்கள்.

வீதியின் மோசமான நிலைமையால் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளும் எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் மழை காலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றோம்.

இவ்வீதியை புரணமைத்துத் தருமாறு இது தொடர்பான அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதும் அவர்களால் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

குறித்த வீதியில் ஒரு சிறு பகுதிக்கு(150 ஆடி) மாத்திரம் வடிகால் அமைக்கப்படுகிறது. ஏனைய வீதி அவ்வாறே உள்ளது.

எனவே அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை பாவனைக்குரிய வீதியாக மாற்றி தர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க