கல்முனை பிரதேச செயலக விவகாரத்தால் தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
முல்லோயா தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் கடந்த கால சம்பவம் காரணமாக இனங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது தமிழ் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்தார்கள்.
எனவே இந்த விடயதத்தில் முஸ்லீம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் ஒரு சுமுகமான தீர்வை எட்ட முடியும்.
மொழி ரீதியாக ஒன்றுப்பட்டு இருக்கும் நாங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்த இரண்டு இனத்துக்கும் ஒரு முறுகல் நிலை ஏற்படும்.
தமிழ் மொழியை பேசக்கூடிய தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் கடந்த காலங்களில் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் பல உரிமைகளை பெற்றிருக்க முடியும்.
அதிகமாக தமிழ் மக்கள் வாழும் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்கு விட்டு கொடுத்து அதன் மூலமாக முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற உறவை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு முஸ்லீம் தலைவர்கள் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கருத்து தெரிவிக்க