தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கான புதிய வணிக திட்டமிடல் கட்டமைப்பை வடிவமைக்க பெருந்தோட்ட தொழிற்துறை அனுமதி அளித்துள்ளது.
40 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் சேவைகள் செயல்திறன் மிக்கதாகவும் இலகுவாக சேவைகளை நிறைவேற்றும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெங்கு உற்பத்தியானது நாட்டின் மொத்த உற்பத்திக்காக 0.6 வீத பங்களிப்பையும் ஏற்றுமதி வருமானத்தில் 5.2வீத பங்களிப்பையும் வழங்குகின்றது.
இந்நிலையில் இப்புதிய வணிக கட்டமைப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருமான உயர்விற்கு கணிசமான அளவு பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்து தெரிவிக்க