உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் இந்திய-ஜப்பான் கூட்டு அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் பேச்சு

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் ஒரு பில்லியன் யென்களை வழங்க முன்வந்துள்ளது.

நேற்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த ஜப்பானின் விசேட தூதுவர் ஹிரோடோ இசுமி இதனை அறிவித்தார்.

அத்துடன் கண்டி பிரதேசத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.

மத்திய அதிவேகப்பாதை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொம்புக்கான இலகு ரயில சேவை தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடினர்.

இதேவேளை இந்திய-இலங்கை- ஜப்பான் கூட்டு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முனைப்புக்கள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய விசேட பிரதிநிதியிடம் விளக்கமளித்தார்.

இதற்கு பதிலளித்த ஜப்பானிய விசேட தூதுவர் ஜப்பானிய பிரதமரும் இந்த திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை தருவார் என்று உறுதியளித்தார்.

கருத்து தெரிவிக்க