இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகியவை இணைந்து வாழ்வாதார , பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முதலாவதாக தியாகி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நுவரெலியா டன்சினன் தோட்டத்தின் மகாத்மா காந்திபுரத்தில் ஒரு தொகுதி வீடுகள் கையளிக்கும் நிகழ்வும், மரம் நடுகை வேலைத்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் இந்திய உயிர்ஸ்தானிகரத்தின் அபிவிருத்திக்கான ஆலோசகர் மஞ்சுநாத், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க