மலையகச் செய்திகள்

அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது-மஸ்கெலிய மக்கள் விசனம்

மஸ்கெலிய பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் தாம் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

மின்சாரத்தை நம்பியே பணிகளை தொடர வேண்டியுள்ள நிலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் வேலைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக இப்பகுதி மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

இப்பகுதியிலுள்ள பெருந்தோட்ட காரியாலயங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

மின்சார தடையினால் எமது பணிகள் ஸ்தம்பிதம் அடைகிறது நீண்ட நேரம் மின்தடை ஏற்படும் வேளையில் மின்பிறப்பாக்கிகளை வாடகைக்கு எடுத்து பணிகளை மேற்கொள்கிறோம்.

அதற்காக 6000 இற்கும் மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் முன் அறிவிப்பு இன்றியும் மின் துண்டிக்க படுவதாக தெரிவிக்கின்றனர் .

அதேபோன்று கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மாணவர்கள் விசனப்படுகின்றனர்.

இது தொடர்பில் மஸ்கெலிய மின்சார சபை உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க