ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோன் சோறென்சென் (Mr.Joern Soerensen ) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மூலம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு விபரிக்கப்பட்டது.
இதன்போது வடமாகாணம் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டு காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு ஆளுநரால் கோரப்பட்டது.
இதேவேளை, வடமாகாண மக்களின் நீர்ப்பிரச்சனையை தீர்க்கவும் இந்தியாவில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளை மீண்டும் அழைத்து வருவதற்கும் ஐ.நா உதவி புரியவேண்டும் என்றும் மேலும் கோரிக்கை விடுத்தார்.
கருத்து தெரிவிக்க