ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளராக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐ.தே.கவின் மத்தியசெயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (19) நடைபெற்றது.
இதன்போதே மேற்படி தீர்மானத்துக்கு கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியது என்றும், அடுத்த கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும் சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், சு.கவிலிருந்து ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கிவரும் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு கட்டான தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குவதற்கும் பரீசிலிக்கப்பட்டுள்ளது.
மஹரகம தொகுதியானது சிங்கள, பௌத்த வாக்குகளை அதிகம் கொண்டதொகுதியாகும். எனவே, வாக்கு வேட்டை நடத்தும் நோக்கிலேயே சம்பிக்கவை களமிறக்கி ஐ.தே.க. வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க