உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறுப்பினரையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கை

நாங்கள் ஆழமாக சிந்தித்து பார்க்கின்ற பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையே இந்த பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்தப்படாமைக்கான காரணம் என நாங்கள் உணர்கின்றோம் என உண்ணாவிரத்தில் குதித்துள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்தார்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக மூன்றாம் நாளாகவும் (புதன்கிழமை 19) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கி.லிங்கேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்த்திற்கு அரச அதிகாரிகளே அரசியல்வாதிகளோ இன்னும் சாதகமான பதிலை தரவில்லை.

இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை நாங்கள் வாக்களித்து அனுப்பிய அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கே தற்போது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காரணமாகும்.

தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் கணக்கு பார்க்கின்றனர்

கல்முனையில் இருக்கின்ற வாக்குகளைக் கொண்டு ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய முடியாது என்று எண்ணியே இந்த பிரச்சிளையை இழுத்தடிப்பு செய்த வருகின்றனர்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே எமது மக்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர்.

இத்தருணத்தில் அவர்கள் எம்மை புறந்தள்ளினால் பெற்ற ஒரு உறுப்பினரையும் எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே இந்த விடயத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து பார்க்கின்றபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையே இந்த பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்தப்படாமைக்கான காரணம் என நாங்கள் உணர்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க