இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் அதன் ஆபத்து தொடர்ந்தும் நீடிக்கின்றது. உலக நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் முற்றாக ஒழிக்கப்படவில்லை ஆகையால் பொதுமக்கள் உரிய சுகாதார அணுகுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சில நாடுகளில் இரண்டாம் சுற்றாக வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளது. அத்துடன் மூன்றாம் சுற்று ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடுகளும் உள்ளன.

வைரஸ் ஆபத்து முற்றாக ஒழிக்கப்படும் வரை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். பொது இடங்களில் கைககளை கழுவுதல், முகக்கவசம் அணிவது ஆகியன கட்டாயமான விடயங்கள். இவ்வாறான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுபவர்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க