பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் தேயிலை மலையை சுத்தம்
செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜந்து ஆண் தொழிலாளர்கள் குளவி
கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக
பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.30மணி அளவில் இடம்பெற்றதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தேயிலை மலையை சுத்தம் செய்து கொண்டிருந்த வேலை மரத்தில் இருந்த குளவி
கூடு கலைந்து வந்து தாக்கிஉள்ளதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லயென
பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேலை மலையகத்தில் மரங்களில் பாரிய குளவி கூடுகள் கானபடுகின்றமையால்
அதிகமாக தோட்ட தொழிலாளர்களே பாதிக்படுவதாகவும் மரங்களில் உள்ள குளவி
கூடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினை சம்பந்தபட்ட தரப்பினர் மேற்கொள்ளபட
வேண்டும் எனவும் பாதிக்கபட்ட தொழிலாளர்கள் கோறிக்கைவிடுக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க