உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகின்றனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியா ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமக்கு கம்பரலிய இல்லை. எனினும் நாம் மக்களுக்கான தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்து வருகின்றோம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போது அரசுடன் முரண்பட்டு ஆதரவை வாபஸ் பெறுகின்றதோ அன்று இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படும்.
நாங்கள் தேசிய அரசாங்தக்தில் இருந்த காலத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்காளிக் கட்சியாகவே இருந்தது.
அதனூடாக நிதியைப்பெற்று வேலைத்திட்டங்களை செய்தார்கள் அது பாராட்டத்தக்க விடயம்.
எனினும் இந்த தொங்கும் பாராளுமன்றத்தை பயன்படுத்தி உரிமையை பெறவில்லை என்பதே எமது கவலை.
உரிமைப்போராட்டம் நடைபெற்றது. அது காட்டிக்கொடுப்புக்களால் தோற்கடிக்கப்பட்டது.
இன்று காட்டிக்கொடுத்தவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையே இன்று உருவாகியுள்ளது.
இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. தற்போதைய நிலைமையால் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உரிமையையும் பெறமுடியாதுள்ளதாக கூறுகின்றனர்.
அவ்வாறெனில் இவ்வளவு காலமும் என்ன செய்தீர்கள் என கேட்கின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க