ஜப்பானின் வட பகுதியில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இது 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளதால் . யமகட்டா , நிகாட்டா , இஷிகா போன்ற பகுதிகளில் சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளித்து பெரிய அளவில் அலைகள் வரத் தொடங்கியுள்ளதால், மக்களை கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் . ஜப்பானின் ஹோன்சு தீவில் இருந்து 53 மைல் தொலைவில், கடற்கரை பகுதியில் 7 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் பாதிப்பு, சேதம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கருத்து தெரிவிக்க