இலங்கையின் திறன்சார் தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்தாகவுள்ளதாக பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கையெழுத்திட உள்ளார்.
இலங்கை ஜப்பான் ஒப்பந்தம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரம்பற்ற வகையில் இலங்கை திறன் சார் ஊழியர்கள் 10 வருடங்களுக்கு ஜப்பானில் தொழில் பெற முடியும்.
திறமை வாய்ந்த தொழிலாளர்களை அனுப்புவதற்கு ஜப்பானால் வாய்ப்பு வழங்கப்பட்ட 9 நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஒப்பந்தத்தின் மூலம் 14 பிரிவுகளில் உள்ள திறமையான தொழிலாளர்கள் அந்த நாட்டில் வரம்பற்ற வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.
அதன்படி, சுகாதார பராமரிப்பு, கட்டிட தூய்மையாக்கள் முகாமைத்துவம், இயந்திர பாகங்கள் மற்றும் கருவித் தொழில்கள், இயந்திரத் தொழில்துறை , மின்சார / மின்னணு மற்றும் தகவல் தொழில், கட்டுமானத் தொழில், கப்பல் உருவாக்கல் மற்றும் கப்பல் இயந்திரத் தொழில், ஒட்டோமொபைல் மற்றும் பழுதுபார்ப்பு பிரிவு, விமானத் தொழில், விடுதித் தொழில், விவசாயம், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு, உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி மற்றும் உணவு சேவைத் தொழில் ஆகிய பிரிவுகளில் ஜப்பானில் வேலை செய்ய முடியும்.
அத்துடன் ஜப்பானில் இருந்து இலங்கை வரும் நிபுணர் குழு எமது தொழிலாளர்களுடன் தொழிநுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க