உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தௌய்த் உறுப்பினர்களை பிணையில் செல்லவிட்டமைக்கு பின்னால் அரச உயர்மட்டம் உள்ளது!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை நடத்திய உள்ளுர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களை கைது செய்து பிணையில் விடுவித்த செயற்பாட்டிற்குப் பின்னால் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டம் இருந்திருக்கலாம் என்று மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
தீவிரவாத தாக்குதலை நடத்திய சஹ்ரான் பலியான போதிலும் அதேபோன்ற பல சஹ்ரான்களை முஸ்லிம் அரசியல்வாதிகளால் உருவாக்க முடியும் என்ற எச்சரிக்கையையும் தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ளது.
படவிளக்கம்
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் காலை நடைபெற்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தாக்குதல்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எந்தவித முறையான விசாரணைகளுமின்றி பிணையில் விடுவிக்கப்பட்டமையே பாரதூரமான பிரச்சினைகளுக்கு காரணமாகியதாக இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க