விளையாட்டு செய்திகள்

ஒருநாள்- டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் கோஹ்லி

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 890 புள்ளிகளையும் டெஸ்ட் போட்டிகளில் 922 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 913 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும் 881 இந்திய அணியின் புஜாரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள்  போட்டியின் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா 839 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் ரோஸ் டெய்லர் 831 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்

கருத்து தெரிவிக்க