சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்டதாகக் கூறப்படும் குருநாகலை போதனா வைத்தியசாலை வைத்தியரான சாஃபிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டம் அக்மீமன பிரதேசத்தில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதோடு மருத்துவர் ஷாபியின் உருவப் பொன்மைக்கு தீவைத்து எதிர்ப்பும் வெளியிடப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அக்மீமன பிரதேச சபை உப தலைவர் ஏ.கே. சுகத் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மருத்துவர் ஷாபிக்கு எதிராக கடவுள் மன்றாட்டமாக தேங்காய்களும் உடைக்கப்பட்டன.
இதேவேளை குருநாகலை மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 1060க்கும் அதினமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து தெரிவிக்க