ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாமா என்று பொது மக்கள் கருத்துக் கணிப்பை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாறாக நியமித்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவில் மஹிந்த அணியினர் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்று அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன.
எனினும் ஜனாதிபதி தேர்தலை விட முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தேசித்திருக்கிறது.
இதற்காக பொதுமக்கள் கருத்துக் கணிப்பை நடத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி பெற்றிருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள மஹிந்த அணியினர், குறித்த தினத்தில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
எவ்வாறாயினும் நாட்டின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து தெரிவிக்க