வெளிநாட்டு செய்திகள்

வட கொரியா செல்லும் சீன ஜனாதிபதி :

சீன ஜனாதிபதி சீ . ஜின்பிங்  இந்த வாரம் வட கொரியாவிற்கு  உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . கடந்த வருடம் மார்ச் மாதம் வடகொரியா ஐனாதிபதி கிம் ஜோங் உன் , தன் மனைவியுடன் திடீர் பயணமாக சீனா சென்றிருந்த போது அந்நாட்டு ஐனாதிபதியை சந்தித்து உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது .அந்தப் பயணம் தான் அவருடைய முதலாவது வெளிநாட்டுப் பயணம் எனக் கூறப்படுகிறது . பின் இவ்வாண்டு ஜனவரியில் அவர் மீண்டும் சீனா சென்றிருந்தார் .

இதனையடுத்து எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சீன ஜனாதிபதி சி.ஜின்பிங் வடகொரியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன . 2005 இல் சீன ஜனாதிபதியாக இருந்த ஹு ஜின்டாபோ , அப்போதைய வடகொரிய ஜனாதிபதி இரண்டாம் கிம் ஜோங்கை சந்தித்தார் . அதன்பின் 14 ஆண்டுகளுக்கு பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் வடகொரியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க