உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாட்டிலுள்ள நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்க முடியாது! – முப்பீட தேசிய பிக்கு ஒன்றியம் திட்டவட்டம்

மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமதத் தலைவர்களிடம் பேச்சு நடத்தாமல் குறைந்த பட்சம் பொது மக்களின் கருத்துக் கணிப்பை நடத்தாமல் நாட்டிலுள்ள நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்று முப்பீடங்களின் தேசிய பிக்கு ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா உட்பட நாடுகளுடன் சர்வதேச உடன்படிக்கைகளை செய்துகொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலைலேயே முப்பீடங்களின் தேசிய பிக்கு ஒன்றியம் இதற்கு போர்கொடி உயர்த்தியுள்ளது.

சோபா போன்ற சர்வதேச உடன்படிக்கைகளை அமெரிக்காவுடன் செய்துகொள்ளும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
எனினும் இந்த செயற்பாட்டிற்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கண்டியில் இன்றைய தினம் முப்பீடங்களின் தேசிய பிக்கு ஒன்றியம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முப்பீடங்களின் தேசிய பிக்கு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான லியன்வெல சாசனரத்தன தேரர், மகாநாயக்க தேரர்கள் மற்றும் மதத் தலைவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்திய காரணத்தினாலேயே தீவிரவாத தாக்குதல்களை நாடு எதிர்கொண்டதாக குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க